Wednesday 1 October 2014

பாரம்பரிய மருத்துவம். எலுமிச்சம் பழம். அத்திப்பழம்




Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931


எலுமிச்சம் பழம்
இதனைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஊறுகாய்க்கு பயன்படும் என்பதுதான். இதில் வைட்டமின் சி யும், அஸ்கார்பிக் ஆசிட்டும் இருப்பது தெரியாது.
மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம்தான் பெறமுடியும். அதற்கு கை கொடுப்பது எலுமிச்சை பழச்சாறாகும். ஆதிகாலந்தோட்டு மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது.
உயிரியல் ரசாயனமாற்றம் நடைபெறுவதில் பங்கு வகிப்பது வைட்டமின் -சி ஆகும். ஸ்கர்வி எனும் ஒருவகை நோய் உலகின் பலரை துன்புறுத்தியது. இதற்கு காரணம் என்ன என்று கண்டறிந்த போது வைட்டமின் சி பற்றாக்குறைதான் காரணம் என்று கண்டறிந்தார்கள். வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. இத்தனை கனிகளில் வைட்டமின் சி இருந்தும் நம்மில் பலர் இதனை மாத்திரை வடிவத்தில்தான் சாப்பிட விரும்புகின்றனர். அதுவும் அதிகம் செலவு செய்து. ஆனால் ஒன்று தெரியுமா இந்தமாத்திரைகளில் காய்கனிகளில் இருப்பதைவிட குறைவாகத்தான் வைட்டமின் சி இருக்கிறது. எனவே காய்கனிகளுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.
குழந்தைகளுக்கு 35 மி.கிராமும், பெரியவர்களுக்கு 50 மி.கிராமும், பாலு}ட்டும் தாய்க்கு 80 மி.கிராம் வைட்டமின் சியும் தினம் தேவையாகும்.
நகர்புற ஏழ்மையானவர்களிடம் வைட்டமின் சி பற்றாக்குறையால் ஸ்கர்வி எனும் நோய் பரவலாக இப்போதும் இருந்து வருகிறது. முடியில் நிறமாற்றம், முடிஉதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு அதிக அளவில் வைட்டமின் சி யை தர எளிதில் குணமாக்கலாம்.


மாம்பழம்

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.
100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள்.
மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதைவிட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே. நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.
மாம்பழத்தின் பூர்வீகம் இந்தியாதான். இப்போதும் அதிகமாக இங்குதான் மாம்பழம் உற்பத்தி ஆகிறது.
உத்திரப்பிரதேசத்தில்- சப்போட்டா, துஷேரி போன்ற வகையான மாம்பழங்களும், தென்னிந்தியாவில் அல்போன்சா, பகனப்பள்ளி, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல் கோவா, கிளிமூக்கு என்று பல்வேறு வகையான மாம் பழங்கள் கிடைக்கின்றது. அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.
அத்திப்பழம்

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.

மூலிகை நீர்


சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.
ஆவாரம்பூ நீர்

ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோஎன்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
கரிசாலை நீர்

சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.
செம்பருத்தி நீர்
செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.
காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
நன்னாரி நீர்

தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.
துளசி நீர்
குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,
தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.
வல்லாரை நீர்

யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். காய சித்திக்கு புளியாரைகபால கோளாறுக்கு வல்லாரைஎன்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.
பீட்ரூட்

 தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.
பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.
பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.
பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.
பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.
பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.
பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.
பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
 இயற்கையோடு இணைந்து வாழ்வோம்
மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய்கள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சய மாகப் பெற முடியும். ஆனால் நாம் இயற்கைக்கு முரண்பட்டு எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். அதுதான் பிரச்சினைகளுக்கு ஆணிவேர்.
நமது உடலில் இரத்தம் தூய்மையாக இருக்க, இயற்கை தரும் உணவு தேன். தினமும் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள குற்றங்கள் நீங்கும். உடல் பருமனைக் குறைக்க வேண்டுமானால் முள்ளங்கி அல்லது கேரட்டைத் துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, அருந்தி வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து பருமன் குறையும். ஜீரணக் கோளாறுகள் உடையவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து பருகினால் ஜீரணக் கோளாறுகள் சீரடையும். ரத்தமும் சுத்தம் அடையும்.
விரல் நகங்கள் சிதைந்து வலிமை அற்றதாய் இருந்தால், சுண்ணாம்புச் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். பால் இதற்கு மிகவும் சிறந்த பலன்களை அளிக்கும். தலைமுடி நன்கு வளர, கீரைகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பால் பொருட்கள், முருங்கைக்காய் முதலிய வற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் முடி செழித்து வளரும். கறி வேப்பிலைச் சாறும் தேங்காய் எண்ணெயும் கலந்து நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால் முடி கருத்து செழித்து வளரும்.
தக்காளியைப் பச்சையாகப் பச்சடியாகவோ, சாறாகவோ அருந்தி வந்தால், தோலின் நிறம் கூடும். ரோஜா இதழ்களை தேனில் ஊறுவைத்துத் தயாரிக்கப்படும் குல்கந்து உண்டு வந்தால் தோலின் நிறம் கூடி பளபளப்பு பெறும்.
கேரட் கண்பார்வைக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே இதனை தினமும் பச்சையாக உண்டு வந்தால் கண்பார்வை கூர்மை பெறும்.
உணவு உண்ணும் நேரங்களில், சிறிது இஞ்சிச் சாறு, எலுமிச்சஞ் சாறு, தேன் இவற்றைக் கலந்து இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு அருந்தி வந்தால், இரத்தம் தூய்மை அடைந்து, முகப்பருக்கள், மரு,வெண்புள்ளிகள் மறைந்து முகம் தூய்மை பெறும். தக்காளி, ஆரஞ்சு சாத்துக்குடி,அன்னாசி ஆகிய பழங்களில் புத்தம் புது சாறுகள் உடல் ஆரோக்கியத் திற்குப் பெரிதும் உதவும்
 வைட்டமின் குறைபாடு நீங்க

கறிவேப்பிலை, பிரண்டை, கொத்துமல்லி, புதினா, முளைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங் கன்னிக் கீரை, பசலைக் கீரை இவற்றை தினம் ஒவ்வொன்றாக நம் உணவில் சேர்த்துக் கொண்டே இருந்தால், வைட்டமின் குறைபாடு நம்மை அண்டவே அண்டாது. மேலே சொன்னவற்றில் நான்கு வகைகளில் துவையல் செய்யலாம். மற்ற கீரைகளை பாசிப் பருப்போ, துவரம்பருப்போ சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.
வீணாக கிடக்குதா புதினா?: புதினாவை அதிகம் வாங்கி விட்டு அல்லல்படுவதை விட, அதிகமாக இருக்கும் புதினாவில் இலையை மட்டும் தனியாக எடுத்து, கல் உப்பு போட்டு கசக்கி அதைப் பற்களில் தினமும் நன்றாகத் தேய்த்தால், வாயில் கெட்ட வாடை நீங்கி, பல் பளிச்சிடும்.
 பொடுகை விரட்ட வேப்பம்பூ
பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.



Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 500/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com

No comments:

Post a Comment