Wednesday 30 July 2014

ஆயுஷ்ய ஹோமம் - அப்த பூர்த்தி



ஆயுஷ்ய ஹோமம்  - அப்த பூர்த்தி

குழந்தை பிறந்து 12 மாதங்கள் முடிந்து 13 வது மாதம் குழந்தை பிறந்த அதே தமிழ் மாதமாகும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்த அதே நக்ஷத்திரம் வரும் தினத்தில் சுபவேளையில் அப்தபூர்த்தி ஆயுஷ்யஹோமம் செய்யப்படுகிறது. அப்த என்றால் ஒன்று, பூர்த்தி என்றால் நிறைவு. எனவே அப்தப10 ர்த்தி என்பகை 'ஆண்டு நிறைவுஎன்றும் சொல்வார்கள். ஜன்ம நக்ஷத்திரத்தில் குழந்தைக்கு புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு ஸ்நானம் செய்து வைத்து, புது ஆடைகள் அணிவித்து, ஆபரணங்களைக் கொண்டு அலங்காரம் செய்வித்து, குழந்தையின் அம்மான் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டும். பின்னர் ஹோமம் வளர்த்து, 'ஆயுஷ்ய சூக்தம்என்னும் மந்திரத்தைக் கொண்டு ஆயிரத்தெட்டு தடவை நல்ல நெய்யைக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். 'மிருத்ய10” பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காக செய்யப்படும் ஹோமமாகும். இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்என்று இது பெயர் பெற்றது. ஆயுள் அபிவிருத்திக்கு சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமமாகும். இத்துடன் கலசத்தால் கும்பம் அமைத்து, வருணனையும், குழந்தையின் நக்ஷத்திர தேவதையையும் ஆவாஹனம் செய்யும் மந்திரங்களைச் செபித்து அக்கலச தீர்த்தத்தை குழந்தைக்கு ஸ்நானம் செய்வித்து தீர்தத்தை உள்ளுக்கும் கொடுக்க வேண்டும். ஹோமம் செய்த நெய்யின் மிச்சத்தில் அன்னத்தைக் கலந்து அதை மந்திர பூர்வமாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இந்த ஆண்டுநிறைவு, நடப்பு மாதத்தில் இரு நக்ஷத்திரங்கள் வருமானால் பின் வருகிற நக்ஷத்திரத்திலேயே இதைச் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. சில ஸமயம் ஒரே நக்ஷத்திரம் இரண்டு தினங்களில் வரும். இதனால் என்று அநுஷ்டிப்பது என்ற குழப்பமும் வரும். என்றைய தினத்தில் சூரிய உதயத்திலிருந்து உச்சிப் பொழுதுக்குள் குறைந்தது 12 நாழிகை அதாவது 4 மணி 48 நிமிட நேரம் என்று நக்ஷத்திரம் இருக்கிறதோ அன்றைய தினம் அநுஷ்டிக்கவேண்டும்


ஆயுஷ்ய ஹோமம்
மஞ்சள்தூள் - 100 gm, சந்தனம் - 100 gm, குங்குமம் - 50 gm, விபூதி- 50gm,
ஊதுபத்தி -
1 pkt, கற்பூரம் - 2 pkt, கலச நூல் 3 Nos அரிசி - 5 kg, ஏலக்காய் - 10 gm, பச்சைகற்பூரம் - 5 rs, பன்னீர் - 1 ltr, நெய் - 1 kg, மஞ்சள்கிழங்கு - 1/2 kg, கலச சொம்பு – 3, அல்லது 11 Nos, கலச வஸ்த்ரம் - 9/5 வேஷ்டி, துண்டு - 1 nos,10ம் no நூல்கண்டு - 2 nos, வெற்றிலை - 1 கவுளி, பாக்கு - 100 gm, தேங்காய் - 8 nos, To 15 Nos வாழைப்பழம் - 2 டஜன், மற்ற பழங்கள் - வகைக்கு 6, வாழை இலை - 9, எருவிராட்டி - 25 nos, சிராய் - 2 kg, நல்லெண்ணை - 1/2 ltr, விளக்கு திரி, தீப்பெட்டி உதிரி புஷ்பங்கள்,தொடர் புஷ்பங்கள்,ஹாரம், இது போக ஹோம பொருட்கள்.
-----------------------------------------------------------------------------------------------
சுவாமி படங்கள், விளக்கு, கத்தி, தாம்பாலங்கள்-10, டவராக்கள்-12, பூஜை மணி, பஞ்சபாத்திர உத்தரணி, பழைய நியூஸ் பேப்பர், ஜமக்காளம், பட்டுப்பாய் பருப்பு தேங்காய், சர்க்கரை கற்கண்டு, பக்ஷணங்கள்
மாவிலை கொத்து, சில்லரை காயின் - 101

ஸ்ரீ ராமஜெயம்
அப்தபூர்த்தி சாந்தி கர்ணபூஷண சுபமுஹூர்த்த பத்திரிக்கை
மஹா ராஜ ராஜ ஸ்ரீ................................... அவர்களுக்கு
அநேக நமஸ்காரம் / ஆசீர்வாதம் / உபயக்ஷேமம்
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ................வருஷம் ................... மாதம்........ம் தேதி (                 ) ............... கிழமை..........................   ................................நக்ஷத்ரம் ....................யோகம் கூடிய சுபதினத்தில் உதயாதி நாழிகை......... க்கு மேல் ....... க்குள் ( காலை மணி ......... க்கு மேல் ........ க்குள் ) ......................லக்னத்தில்
-------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------
அப்தபூர்த்தி சாந்தி கர்ணபூஷணம் செய்வதாய் ஈஸ்வர க்ருபையால் ஆசார்யார்களின் அனுக்ரஹத்துடன் பெரியோர்களாள் நிச்சயிக்கப்பட்டு மேற்படி சுபமுஹூர்த்தம்     
.......................................................................................................................
வைத்து நடக்கிறபடியால் தாங்கள் தங்கள் இஷ்டமித்ர பந்துக்களுடன் முன்னதாகவே வந்திருந்து மேற்படி சுபமுஹூர்த்தத்தை நடத்திக்கொடுத்து குழந்தையை ஆசீர்வதித்து என்னையும் கௌரவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

குழந்தை பிறந்த முதலாம் ஆண்டில் நீண்ட ஆயுளுக்காக செய்யப்படும் ஹோமம் "ஆயுஷ்ய ஹோமம் ஆகும். குழந்தைக்கு தொடர் தேக உபாதைகள் இருந்தால் இந்த ஹோமத்தின் மூலம் சரிசெய்துவிடலாம். மருந்தால் குணப்படுத்த முடியாத வியாதிகளைக்கூட தீர்த்துவிடலாம். ஒவ்வொரு மாதமும் கூட குழந்தையின் ஜென்ம நட்சத்திர நாளில் இதைச் செய்து வரலாம்.

நீண்ட நாள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் தவறாமல் ஆயுஷ்ய ஹோமம் செய்ய வேண்டும். குழந்தையின் முதல் பிறந்த நாளில் ஆயுஷ்ய ஹோமம் செய்து பலரின் ஆசியைப் பெற வைக்க வேண்டும். இந்த ஹோமத்திற்கு தேவைப்படும் இரண்டு முக்கிய பொருட்கள் :

1. கருங்காலி சமித்
2. சாதம் (அன்னம்) முதலில் சங்கல்பம் செய்து கொண்டு விக்னேசுவர பூஜை செய்து, கும்பத்தில் புண்யாஹ வசனம் செய்து ஆயுஷ்ய ஹோமம் செய்ய வேண்டும்.

குழந்தையின் நட்சத்திர ராசி பெயர் சொல்லி ஆயுஷ்ய ஸூக்தம் நட்சத்திர மந்திரம் சொல்லி கருங்காலி ஸமித், அன்னம், ஆஜ்யம் (நெய்) ஆகியவற்றிற்குத் தனித்தனியாக 108 அல்லது 1008 முறை மந்திரத்தைச் சொல்லி முதலில் ஸமித்தாலும், பிறகு அன்னத்தில் சரிபாதியைக் கொண்டும், பிறகு நெய்யாலும் ஹோமம் செய்ய வேண்டும்.

பின்னர் நெய்யால் 11 ரிக்குகளால் ஹோமம் செய்ய வேண்டும். அடுத்து சுவிஷ்டக்ருத் ஹோமம் செய்து பாதி அன்னத்தை, வெல்லம், நெய் சேர்த்துக் குழந்தைகளுக்குப் பிராசன மந்திரம் மூலம் மூன்று முறை நெல்லிக்காயளவு ஊட்டி விடவும். பிறகு குரு, தட்சிணை தர வேண்டும்.

பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று மங்கள ஆரத்தி எடுத்து இனிதே ஹோமத்தை முடிக்க வேண்டும். எல்லா பிறந்த நாளிலும் தான தர்மங்களுடன் நட்சத்திர - ஆயிஷ்ய ஹோமமாக செய்தால் ஆயுள் பலம் கெட்டியாகும்

புரோகிதர், ஜோதிடர்
Manikanda Sharma G.V
Neela Matrimony
Neela Infomedia  ( WEBDESIGN )
Neela Computers
99 62 22 53 58
94 44 22 60 39

Tuesday 29 July 2014

கணபதி ஹோமத்தின் சிறப்பு அம்சங்கள் பார்ப்போம்




கணபதி ஹோமம் ( தடைகள் நீங்க )
கணபதி ஹோமத்தின் சிறப்பு  அம்சங்கள் பார்ப்போம்
பாரம்பரியமாக 32 கணபதி உருவங்கள் சொல்லவார்கள். அவை; 
பாலகணபதி, தருணகணபதி, பக்திகணபதி, வீரகணபதி, சக்திகணபதி, துவிஜகணபதி, சித்திகணபதி, உச்சிஷ்டகணபதி, விக்னகணபதி, க்ஷிப்ரகணபதி, ஹேரம்பகணபதி, லக்ஷ்மிகணபதி, மஹாகணபதி, விஜயகணபதி, நிருத்தகணபதி, ஊர்த்துவகணபதி, ஏகாக்ஷ்ரகணபதி, வரகணபதி, திரயாக்ஷ்ரகணபதி, க்ஷிப்ரப்ரசாதகணபதி, ஹரித்திராகணபதி, ஏகதந்தகணபதி, ஸ்ருஷ்டிகணபதி, உத்தண்டகணபதி, ருணமோசன கணபதி, துண்டிகணபதி, துவிமுக கணபதி, த்ரிமுககணபதி, சிங்ககணபதி, யோககணபதி, துர்க்காகணபதி, சங்கடஹரகணபதி.
எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும்போது கணபதி ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம். ஒரு கடிதம் எழுதும்போதும் கூட பிள்ளையார்சுழியுடன் துவங்குவது மரபு. விநாயகரே முழு முதற்கடவுள். சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும்கூட கணபதியை வணங்கிய பிறகே எந்த செயலையும் துவங்கவேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டது. சிவபெருமானின் தேர் அச்சு முறிந்த இடத்தை இப்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கிறார்கள். செங்கல்பட்டு அருகே இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகரையும் அச்சிறு விநாயகர் என்றே அழைக்கிறார்கள். கணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஓதி, அவரை புகழ்ந்து பக்திப்பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் காதணி விழா, பிறந்தநாள், திருமண நிகழ்ச்சி, தொழிற்சாலைகளில் நடக்கும் பவள விழா, முத்துவிழா ஆகிய நிகழ்ச்சிகளிலும் கணபதி ஹோமம் செய்ய வேண்டும். புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் வேள்வி அவசியம். நல்ல காரியங்களில் மட்டுமின்றி மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்வது மிகச்சிறந்த பலனைத்தரும். நமது சக்திக்கு ஏற்றபடி செலவு செய்து இந்த பூஜையை நடத்தலாம். தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை 5 ஆயிரம் ரூபாய்வரை இதற்கு செலவாகும். வீடுகளில் ஆயிரம் ரூபாய்க்குள் இந்த பூஜையைச் செய்து முடிக்கலாம். கணபதி ஹோமத்தை ஒருமணி நேரத்திற்குள் செய்து முடித்துவிடலாம்.
ஒரு குடும்பத்தின் நலம் வேண்டி முதலில் செய்ய வேண்டியது கணபதி ஹோமம் ஆகும். கணபதி ஹோமத்திற்கு பொரி, அவல், சத்துமாவு, கொழுக்கட்டை, அப்பம், அறுகம்புல், கரும்புதி துண்டு, எருக்கம்பூ ஆகியவை அவசியமாகும். ஹோமம் செய்து வைக்க புரோகி தரும் உடன் ஜெபம், தியானம் முதலியவற்றைச் செய்ய நான்கு புரோகிதர்களும் மிக அவசியம். ஹோமத்திற்கு முன் செய்பவற்றைப் பூர்வாங்கம் என்றும் பின் செய்பவற்றை உத்ராங்கம் என்றும் சொல்வார்கள்.

முதலில் ஹோமகுண்டம், கணபதி சன்னதி புண்யாஹவசன கடம், ஆவாஹன கலசம், நைவேத்யம் போன்ற ஹோமத்திற்கான பொருள்களை தயார் செய்து முறைப்படி வைத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தினர் கூடத்தில் அமர்ந்து கொண்டு புரோகிதர் மூலம் கணபதி ஹோமம் செய்ய வேண்டும். செய்முறை :


1. சங்கல்பம் : இந்த நாளில் இந்த நலன் வேண்டி இந்த ஹோமத்தைச் செய்கிறேன் என்று சபதம் செய்து கொள்ளவும்.

2. தானம் : ஏழைகள், பெரியவர்களுக்கு தானம் செய்து அனுமதியைப் பெற வேண்டும்.

3. ஜப, தியானம்

4. புண்யாஹவசனம் கணபதியின் மூல மந்திரங்களால் ஒரு கலசத்தில் ஆவாஹனம் செய்து ஆசனமிட்ட குடத்தை வைத்து வருணனை ஆவாஹனம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதற்கான மந்திரங்களை ஜபம் செய்து பிறகு அந்த ஜலத்தால் அனைவரையும், அனைத்தையும் மந்திரசுத்தி செய்ய வேண்டும்.

5. ஹோமம் : ஹோம குண்டத்தினருகில் மந்திரம் மூலமாக அந்தந்த பொருட்களை அந்தந்த இடத்தில் வைத்து பிரதிஷ்டை, சுத்தம் செய்து, அக்னியை குண்டத்தில் சேர்த்து பிரம்மா முதல் அனைத்து தேவதைகளுக்கான மந்திரத்துடன் நெய், சமித்து, தர்ப்பம் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும்.

பிறகு கணபதிக்கு மந்திரங்களாலும் திரவியங்களாலும் ஹோமம் செய்து, மந்திர கோஷங்களுடன் பூர்ணாஹூதி ஹோமம் செய்ய வேண்டும். இதையடுத்து கணபதிக்கு பூஜை செய்து நைவேத்யம் அனைத்தையும் வைக்க வேண்டும். கணபதி ஆவாஹன கலசத்தை இருப்பிடம் சேர்த்து அந்த தண்ணீரால் தங்களைப் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் இனிதே முடிந்தவுடன் மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.
பல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே தபால் பெட்டியில் போடுகிற மாதிரி, பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைக்கின்கிறன என்பது காஞ்சி மகாப் பெரியவரின் மகாவாக்கு. நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர், தேவர்கள். கடலிலுள்ள நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப்பொழிந்து வரும் சுழற்சியைப் போன்றதுதான் இந்த ஹோமங்கள்.
நமக்கு அருகேயுள்ள சக்திகளை தொடர்பு கொள்ள வைக்கும் விதம்தான் மந்திரப்பூர்வமான ஹோமங்கள். மந்திரங்களால் நிறைந்த பிரதேசங்களின் அலைவரிசை நம் மனதிற்கு பலத்தைக் கொடுக்கிறது. எங்கேயோ தடைபட்டிருந்த சக்திகளை மந்திர ரூபமாக உள்ள தேவர்கள் அகற்றுகின்றனர். பூமியில் உட்கார்ந்து கொண்டு அண்டத்திலுள்ள செயற்கைகோளை சரி செய்வதுபோன்ற ஒரு செயலை ரிஷிகள் அநாயாசமாக அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமாகும் விதமாக ஹோமங்களாக வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். இந்திராய ஸ்வாஹா... என்றால் அங்கு இந்திரன் வரவேண்டும், இது வேதத்தின் சத்தியக் கட்டளை. அழைக்கும்போதே அனுக்கிரகத்தோடு வரும் கருணை. இது, மனிதர்கள் தாங்கள் தனித்தவர்கள் அல்ல. தங்களைச் சுற்றிலும் பல்வேறு சக்திகள் இயக்கியும், இயங்கியபடியும் உள்ளன என்பதன் சூட்சுமமும் உள்ளது. எனவே, இன்ன ஹோமம் செய்தால் இன்ன பலனை கொடுத்தே தீருவார்கள். அவற்றில் முதன்மையானதுதான் கணபதி ஹோமம்.
தனக்கு மேல் எந்த நாயகரும் இல்லாததாலேயே அவருக்கு வி - நாயகர் அதாவது விநாயகர் என்று பெயர். எனவே அவரே ஆதிநாயகரும் ஆவார். தேவர்களிலிருந்து மகாதேவனான ஈசன் வரை அவர் மகனே ஆனாலும் வழிபட்டுவிட்டுத்தான் காரியத்தை தொடங்குகின்றனர். அப்படி தொழாது திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட ஈசனின் தேர் அச்சாணியை விநாயகர் உடைத்தார். தேரே ஸ்தம்பித்து நிற்கும்போது ஈசன் விநாயகரை வணங்காது புறப்பட்டுவிட்டதை உணர்ந்தார். எப்பேற்பட்ட தவறு இது என்று விநாயகரின் எதிரே தலைகுனிந்து மண்டியிட்டார். இது ஈசன் தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு உலகிற்குச் சொன்ன பாடமாகும். ஈசனே வணங்கும் கணபதியை வணங்குவது என்பது ராஜபாட்டையில் நடந்துபோவது போல.
கணபதி ஹோமம் என்பது எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறாமல் நேர்ப்பாதையில் செல்லவும், பாதையில் இருக்கும் தடைகள் நீங்கவும் செய்யப்படுவதே கணபதி ஹோமமாகும். அஸ்திவாரத்தை பலமாக்குவதுபோல ஆதி சக்தியின் அருளைப் பெறுவதற்கான முறையே இந்த ஹோமம். கணபதி ஹோமத்தை செய்வதாலேயே மற்றெல்லா ஹோமத்தையும் செய்யும் தகுதியை ஒருவன் பெறுகிறான். இதற்கு எல்லாவற்றிற்கும் அடிப்படையாக சிரத்தை என்கிற சக்தி வெண்டும். ஆம், சிரத்தையோடு இருத்தல் என்பதே சக்தியின் குவிப்புதான். எனவே, அதிகூர்மையாக பணிவோடு மாபெரும் சக்தியை வேண்டுகிறோம் என்கிற விநயத்தோடு கூடிய மனப்பாங்கு வேண்டும். ஏதோ சொல்கிறார்கள் நாமும் செய்து வைப்போமே என்கிற அசிரத்தையும் அலட்சியமும் இருப்பின் எதையுமே கிரகிக்க முடியாது. இந்தக் காயமெனும் பாத்திரத்தை காலியாக அகங்காரமில்லாது வைத்துக் கொண்டால் விநாயகன் பீடம் போட்டு உள்ளுக்குள் அமர்வான். பிறகு உங்கள் அகத்தில் அவனொரு ஞான வேள்வி நிகழ்த்துவான்.
மகாகணபதி ஹோம மந்திரங்களை உருவாக்கியவர் கனகரிஷி. ஹோமமாகச் செய்தவர் காஷ்யப மகரிஷி. அருகம்புல்லின் மகத்துவத்தை எல்லோரையும் அறியச் செய்தவர்.
கணபதி ஹோமத்தில் முதலில் அனுக்ஞை. அதாவது பெரியோர்களின் அனுமதி ஆசிகளைப் பெறுவது. அதாவது குடும்பத்துடன் சேர்த்து எனக்கு எல்லாத் தடையூறுகளும் நீங்குவதின் மூலம் நினைத்துள்ள எண்ணம் சித்தித்துப் பயனடையும் பொருட்டு மகாகணபதி ஹோமம் செய்வதற்கு எனக்கு தகுதி சித்திக்கும்படியாக அனுக்கிரகம் செய்ய பிரார்த்திக்கிறேன் என்று தொடங்குகிறது. இதற்குப் பிறகு வைதிகர்களின் வழிகாட்டுதலின்படி மந்திரங்களைச் சொல்லி ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். அதில் முதலில் ஹோமத்தைச் செய்பவர்கள் தங்கள் பெயர், மனைவி, பிள்ளைகள், பேரக் குழந்தைகள் எல்லோரின் பெயரையும் பிறந்த நட்சத்திரங்களோடு சொல்லி ஹோமத்தைச் செய்யும் தகுதியை வழங்க அனுமதி பெற வேண்டும். தர்ப்பைகளை காலுக்குக் கீழ் போட்டுக் கொண்டு, விரலிடுக்குகளில் பவித்ரமாக அணிந்து மனைவியோடு அமர்ந்து மந்திரங்களை சொல்லி மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்துக் கொண்டு விக்னேஸ்வரரை பூஜிக்க வேண்டும்.
அடுத்ததாக சங்கல்பம் அதாவது உறுதிமொழி. இந்த இடத்தில் எங்களுக்காக நடத்தப்படும் இந்த ஹோமத்தின் சகல காரியங்களையும் செய்ய இவர்களை ஆசார்யர்களாக வரித்துக் கொள்கிறேன் என்று ஹோமத்தை நடத்தி வைக்க வந்திருக்கும் அந்தணர்களை வணங்க வேண்டும். சங்கல்பத்தின்போது பகவானின் நாமத்தை அதாவது ராம... ராம... என்று ஆத்மப்பூர்வமாக சொல்ல வேண்டும். இதற்குப் பிறகு புண்யாகவாஜனம். சுத்தமான தரையில் பசுஞ் சாணத்தால் மெழுகி நெல்லைப் பரப்பி அதன் மீது வாழை இலை வைத்து அதில் சமமாக அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மையத்தில் தாமரைப்பூவை வரைய வேண்டும். பூவின் நுனியில் தர்ப்பைகளை வைத்து பூரண கும்பத்தை நீர் நிரப்பி அதில் ஏலக்காய், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூவை சேர்க்க வேண்டும். அதன் மீது மாவிலைக் கொத்து, மஞ்சள் தடவிய தேங்காயை வைக்க வேண்டும். இதை வைக்கும்போதே அதற்கென்று உள்ள மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
இதையெல்லாம் முடித்த பிறகு ஹோம குண்டம் அமைத்து எல்லா தேவதைகளையும் ஆவாஹனம் செய்ய வேண்டும். அதாவது எல்லா தேவதைகளையும் வரவழைத்து உயிரூட்டுவதாகும். இதற்குப் பிறகு மகா கணபதி ஹோமம் ஆரம்பிக்கிறது. அவருக்கான மந்திரங்களைச் சொல்லி பதினாறு வகையான உபசாரங்களை செய்ய வேண்டும். நெய்யை ஹோம அக்னியில் வார்க்க வேண்டும். முதலில் நெய்யினாலும், அஷ்ட திரவியங்களாலும் பிறகு தேங்காய் மூடியில் மூன்று கண்கள் இருக்கும் முடியை முதலில் போட்டு ஹோமம், அருகம்புல்லை இரண்டிரண்டாக நெய்யில் தோய்த்துப் போட்டு ஹோமம் அதைத் தொடர்ந்து நெல்லை விட்டு ஹோமம் என்று செய்யலாம். இதைத்தவிர நூறு, ஆயிரம் என்று பல எண்ணிக்கைகளில் மோதகங்களை செய்ய வேண்டும். பழங்கள், ஆலங்குச்சி, சீந்தில் கொடி என்று பல்வேறு விஷயங்களை ஹோமத்தில் சேர்க்கலாம்.
மேலே சற்றே சுருக்கமாக் கூறிப்பிட்டிருக்கிறேன். ஆனால், அந்தணர்களை வைத்துச் செய்யும்போது மிக மிக விஸ்தாரமாக கூடச் செய்யலாம். செய்ய வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டவே இக்கட்டுரை.
மகாகணபதி ஹோமம் மிகவும் சூட்சுமங்கள் நிறைந்தது. அந்த ஹோம குண்டத்தை யானையின் நான்கு வலிமையான கால்களாக நினைத்துக் கொள்ளுங்கள். கால்களை அசைக்காமல் ஸ்திரமாக நின்று கொண்டு யானை உடலையும், தும்பிக்கையையும், தலையையும், காதுகளையும் அசைப்பதாக பாவனை செய்து கொண்டு அக்னியை பாருங்கள். மந்திரங்களோடு சேர்த்து செய்யப்படும் அக்னியின் அசைவுகள் யானை அசைவது போன்றிருக்கும். மகாகணபதி ஹோமத்தின் மையமே உங்களுக்குள் இருக்கும் மூலாதார சக்தியைத் தூண்டுவதுதான். அசைவற்ற மூலாதாரம் என்கிற கணபதி அசைவிக்கவே இந்த ஹோமம். இல்லையெனில் மனம் தாறுமாறாக அலையும். காற்றில் பறக்கும் தூசு போல இலக்கின்றி என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளிக்கும். ஆனால், மூலாதாரம் விழித்துக் கொண்டால் மனம் ஒருமை பெறும். எண்ணங்களில் நேர்த்தியிருக்கும். தைல தாரை போன்று மனம் தெளிவாக அடுத்தடுத்து யோசிக்கும். வெறும் சிந்தனையோடு நில்லாமல் செயல் திறனிலும் உடல் வழியாக உழைக்க வைக்கும். காரணம் மூலாதாரத்தின் பூரணமான சக்தி அதை பிராண சக்தி என்று விதம் விதமாக கூறலாம். அது நம் புத்தி, மனம், உடல் என்று சகல இடங்களுக்கும் பாயும். செயலில் திறன் கூடினால் வெற்றி எளிதாகும்.
ஆகவே, கணபதி ஹோமம் என்பதே வாழ்வின் இக பரலோகத்தின் வெற்றியைக் கொண்டுவரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஹோமங்களைச் செய்யச் செய்ய சித்தத்தில் தெளிவையும் நம்மையும் அறியாமல் இறைவனை அடையும் ஒரு தாபத்தையும் அதிகரிக்கச் செய்யும். இல்வாழ்க்கையில் உள்ளபோதே பிரம்ம வஸ்துவை அடையும் விவேகத்தையும் அதிகரிக்கும். ஆத்மா யக்ஞேன கல்பதா என்பது ருத்ர வாக்கியம். யக்ஞேனத்தினால் ஆத்மா அடையப்படுகிறது என்பதே இதன் பொருள். இப்போது புரிகிறதா கணபதி சகல விஷயங்களிலும் எப்படி கரமருளி காக்கிறார் என்பது.
மகாகணபதி ஹோமத்தை வெள்ளிக் கிழமைகளில் சுக்ல பட்ச சதுர்த்தி, ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் செய்தால் விசேஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பார்கள். அத்தனை எளிமையான தெய்வத்தை சிக்கெனப் பிடித்தால் சீரும் சிறப்போடும் வாழலாம் என்பது எளிமையான பேருண்மை. எப்போதுமே பேருண்மை சூரியனைப் போன்று பிரகாசமாக தெரியும். அதுபோலத்தான் ஆனைமுகனின் வழிபாடும்.
        

ஹோமம் செய்யும் முறை
அனுக்ஞை சுக்லாம்பரதரம்....சாந்தயே
ஓம் பூ .... பூர்புஸ்ஸுவரோம்

சங்கல்பம்:
சுபே சோபனே .... பரமேச்வர ப்ரீத்யர்த்தம்
நக்ஷ்த்ரே - ராசௌ ஜாதஸ்ய ஸ குடும்பஸ்ய
÷க்ஷமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்ய
ஐச்வர்ய அபிவ்ருத்த்யர்த்தம் ஸர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம்
ஸர்வாபீஷ்ட ஸித்த்யர்த்தம் மஹா கணபதி ஹோமம் கரிஷ்யே
.
(தேங்காய் ஒன்றினை உடைத்து, மூங்கில் இலை போல் மெல்லியதாகக் கீறி, வெல்லச் சர்க்கரை, தேன், நெய் ஆகியவை சேர்த்து 8 கீற்றுக்களை ஹோமத்திற்கு வைத்துக் கொள்க. மீதி உள்ளது மஹாகணபதிக்கும் துர்க்கைக்கும் நிவேதனம். கொட்டாங்கச்சிகளை, மூல மந்திரம் ஜபித்துக் கொண்டு அக்னிக்குத் தெற்கிலும், வடக்கிலும் கண்கள் போல வைக்கவும். மட்டைகளை யானையின் துதிக்கை போல் அக்னியின் சுற்றுப்புறத்தில் வைக்கவும்.
எட்டுத்திரவியங்கள் : கொழுக்கட்டை, அவல், பொரி, ஸத்துமா, கரும்புத்துண்டு, தேங்காய்க் கீற்று, எள், வாழைப்பழம் ஆகியவை.
(அருகம்புல்லாலும் ஹோமம் செய்ய வேண்டும்)
1. பூர்ப்புவஸ் ஸுவரோம் என்று அக்னியைப் பிரதிஷ்டை செய்க. (அதற்கு முன், அக்னியைத் தாபிக்க வேண்டிய இடத்தில் அரிசிமாவால் ஒரு சாண் அளவு தரையில் சதுரமாக மண்டலம் செய்து இரு தர்ப்பைகளால் கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் முறையே 3 கோடுகள் வரைந்து நீரைத் தொட்டு, தர்ப்பையைத் தென்மேற்கில் போட்டு மறுபடியும் ஜலத்தைத் தொடுக).
2. அருகில் கும்பத்தில் வருணனை ஆவாகித்துப் பூசை செய்க. அக்னிக்கு வடகிழக்கில் தீபம் வைத்து அதில் துர்க்கை ஆவாஹனம் 16 உபசார பூஜை செய்க.
3. பரிஷேசனம்
அதிதே அநுமன்யஸ்வ அநுமதே அநுமன்யஸ்வ
ஸரஸ்வதே அநுமன்யஸ்வ தேவ ஸவித: ப்ரஸுவ

4. அக்னியில் தியானம் செய்து, ஹோம குண்டத்தின் 8 திசைகளிலும் பூஜை செய்க. (கிழக்கிலிருந்து வரிசையாக ஒவ்வொரு திசையிலும்)
இந்த்ராய நம: அக்னயே நம: யமாய நம:
நிர்ருதயே நம: வருணாய நம: வாயவே நம:
சோமாய நம: ஈசானாய நம: அக்னயே நம: (அக்னியில்)
ஆத்மனே நம: ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:

நெய்யில் 15 சமித்தைத் தோய்த்து, அஸ்மின் ஹோம கர்மணி ப்ரஹ்மன் இத்மம் ஆதாஸ்யே என்று கூற, பிரம்மாவானவர், ஓம் ஆதத்ஸ்வ என்று சொல்லியதும், அக்னியில் சேர்க்க. பிரஜாதிபதியை மனதில் நினைத்துக் கொண்டு வடக்கு மூலையிலிருந்து தென் கிழக்காக நெய்யைத் தாரையாக விடுக. எல்லா சமித்துக்களையும் தொடுக. பின்னர் ஸ்வாஹா, ப்ரஜாபதய இதம் ந மம என்று கூறுக. ஸ்வாஹா இந்த்ராய இதம் ந மம (தெற்கிலிருந்து வடகிழக்காக நெய்யை ஊற்றுக). அத ஆஜ்ய பாகோ ஜுஹோதி (வடகிழக்குப் பாதியில்) அக்னயே ஸ்வாஹா, அக்யை இதம் ந மம, என்றும், தென்கிழக்குப் பாதியில் ஸோமாய ஸ்வாஹா, ஸோமாய இதம் ந மம என்றும் நெய்யால் ஹோமம் செய்க. எல்லாத் தோஷங்களுக்கும் பிராயச்சித்தமாக, ஓம் பூர்ப்புவஸ்ஸுவ : ஸ்வாஹா, ப்ரஜாபதய இதம் ந மம என்று நெய் விடுக.
5. அக்னியின் மத்தியில் மகா கணபதியைத் தியானம் செய்க. அஸ்ய ஸ்ரீ மஹா கணபதி மகாமந்த்ரஸ்ய கணக ரிஷி: காயத்ரீச் சந்த : மஹாகணபதிர் தேவதா க்லாம் பீஜம் க்லீம் சக்தி: க்லூம் கீலகம் ஸ்ரீ மஹாகணபதி ப்ரஸாத ஸித்த்யர்த்தே ஹோம விநியோக: (கரநியாஸம், அங்க நியாஸம் செய்க). பூர்ப்புவஸ்ஸுவரோம் என்று திக்பந்தனம் செய்க.
6. தியானம்: பீஜாபூர கதே க்ஷú கார்முகருஜா சக்ராப்ஜ பாசோத்பல வ்ரீஹ்யக்ர ஸ்வவிஷாண ரத்னகலச ப்ரோத்யத் காராம் போருஹ: த் யேயோ வல்லப யா ஸபத்மகரயா ஸ்லிஷ்டோஜ்வலத் பூஷயா விஸ்வோத்பத்தி விபத்தி ஸம்ஸ்தித கரோ விக்நேச இஷ்டார்த்த:
7. பஞ்ச பூஜை:
லம் ப்ருதிவ்யாத்மநே கந்தம் ஸமர்ப்பயாமி
ஹம் ஆகாசாத்மநே புஷ்பம் ஸமர்ப்பயாமி
யம் வாய்வாத்மநே தூபம் ஆக்ராபயாமி
ரம் அக்னியாத்மநே தீபம் தர்சயாமி
வம் அம்ருதாத்மநே அம்ருதம் மகாநைவேத்யம் நிவேதயாமி
ஸம் ஸர்வாத்மநே ஸர்வ உபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

(பின் கணபதி மூல மந்திரம் ஜபம் செய்க.)

8. நெய்யால் ஹோமம்
ஓம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... க்லௌம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ... .... கம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... கணபதயே ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... வரவரத ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... ஸர்வ ஜனம் மே வசம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... வசமானய ஸ்வாஹா ஸ்ரீ மகா கணபதயே இதம் ந மம

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங் கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமானாய ஸ்வாஹா

108 முறை ஹோமம் செய்யவும்.
9. தேங்காய்க் கீற்றால் ஹோமம்
- நக்ஷத்ரே - ராசௌ ஜாதஸ்ய - சர்மண: ஸகுடும் பஸ்ய அனுகூலம் ப்ரயச்ச ப்ரயச்ச, ப்ரதிகூலம் நாசய நாசய, ஸம்பதோ வர்தய, வர்தய, வர்தய, ஸர்வத்ர விஜயம் ப்ரயச்ச ப்ரயச்ச,
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் .... வசமானய ஸ்வாஹா (8 முறை ஹோமம் செய்க).
10. நெய் ஹோமம்
கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே ... ஸீத
ஸாதனம் ஸ்வாஹா (16 முறை சொல்லி ஹோமம்)

11. நெல் பொரியால் ஹோமம்
உத்திஷ்ட புருஷ ஹரித பிங்கல லோஹி தாக்ஷ ஸர்வாபீஷ்டம் தேஹி தேஹி தா பய தா பய ஸ்வாஹா (9 முறை ஹோமம்) அக்னிரூபாய ஸ்ரீ மஹாகணபதயே இதம் ந மம.
12. தேங்காய் மூடியால் ஹோமம்
ஜாத வேத ஸே....துரிதாய க்னி: ஸ்வாஹா (இரு முறை)
13. நெய்யில் தோய்த்த அருகம்புல்லால் ஹோமம்
மூல மந்திரத்தால் 18 முறை செய்க.
14. 8 திரவியத்தால் ஹோமம்
ஓம் நமோ வ்ராதபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய ஏக தந்தாய விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீ வரத மூர்த்தயே நமோ நம: ஸ்வாஹா (8முறை) ஸ்ரீ மஹாகணபதய இதம் ந மம
15. கணேச காயத்ரீ ஜபம் - 16 முறை.
16. கணேச மாலாமந்திரம் சொல்லி ஹோமம்.
17. கணபதி அதர்வசீர்ஷம் சொல்லி ஹோமம்.
18. உத்தராங்கம்
பூ : ஸ்வாஹா அக்யை இதம்
புவ : ஸ்வாஹா வாயவ இதம்
ஸுவ : ஸ்வாஹா ஸுர்யாய இதம்
அஸ்மிந் ஹோம கர்மணி மத்யே ஸம்பாவித ஸமஸ்த தோஷ ப்ராயச்சித்தார்த்தம் ஸர்வ ப்ராயச் சித்தார்த்தம் ஹோஷ்யாமி ஓம் பூர்புவஸ்ஸுவ : ஸ்வாஹா ப்ரஜாபதய இதம் ஸ்ரீ விஷ்ணவே  ஸ்வாஹா விஷ்ணவே பரமாத்மன இதம் நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா ருத்ராய பசுபதயே இதம் (நீரால் கைகளை நனைக்க)
19. பூர்ணாஹுதி
அஸ்மின் ஹோமகர்மணி பூர்ணாஹுதிம் கரிஷ்யே
பூர்ணாஹுதி தேவதாப் யோ நம: ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
மூலமந்திரம் + வெளஷட்
பூர்ணாஹுதிம் உத்தமாம் ஜுஹோதி ஸர்வம் வை பூர்ணாஹுதி : ஸர்வம் ஏவாப்நோதி அதோ இயம் வை பூர்ணாஹுதி : அஸ்யாமேவ ப்ரதி திஷ்டதி
பூர்ணமத : பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே.... அவசிஷ்யதே
ப்ரஹ்மார்ப்பணம் ..... ஸமாதி நா
பிராணாயாமம் செய்க.
20. பரிஷேசனம்
அதிதே அன்வமங்ஸ்தா : அநுமதே அன்வமங்கஸ் தா : ஸரஸ்வதே அன்வ மங்ஸ்தா :
தே ஸவித : ப்ராஸாவீ :
வருணாய நம : ஸகலாராதனை : ஸ்வர்ச்சிதம்

21. பிரம்ம உத்வாஸனம்
ப்ரஹ்மன் வரம் தே த தா மி ப்ரஹ்மணே நம:
ஸகல ஆராதனை ஸ்வர்ச்சிதம்
(நான்கு பக்கங்களிலும் உள்ள தர்ப்பைகளை அக்னியில் சேர்க்க).

22. உபஸ்தானம்
ஸ்வாஹா அக்னேர் உபஸ்தானம் கரிஷ்யே அக்னயே நம:
மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஹுதாசன
யத் து தம் து மயா தேவ பரிபூர்ணம் தத ஸ்து தே
ப்ராயஸ்சித்தானி அசேஷானி தப : கர்ம ஆத்மகானி வை
யாநி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாணுஸ்மரணம் பரம் (நமஸ்காரம் செய்க)
அக்னிம் ஆத்மனி உத் வாஸயாமி (இதயத்தில் அஞ்சலி செய்க)

23. øக்ஷ
ப்ருஹத் ஸாம க்ஷத்ரப் ருத் வ்ருத் த வ்ருஷ்ணியம்: த்ரிஷ்டு பௌஜ: ஸுபி தம் உக்ர வீரம் இந்த்ர ஸ்தோமேன பஞ்சதஸேன மத்யம் இதம் வாதேன ஸகரேண ரக்ஷ
24. ஸமர்ப்பணம்
குஹ்யாதி குஹ்ய கோப்தா த்வம் க்ருஹாணா ஸ்மத் க்ருதம் ஹவம்
ஸித்தி : பவது மே தே வ த்வத்ப்ரஸதான் மயி ஸ்திரா
ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணம் அஸ்து


மற்றும் சில மந்த்திரங்கள் விளக்கம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா
இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.
அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது.
கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் கணபதி உபாசகர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கர்ண வழிபாடு என்று இதைக் கூறுவர். கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது.துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது.
கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00 க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
விநாயகரை தேய்பிறை சதுர்த்தி தோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும்.அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று. மாசி மாதம் வரும் சதுர்த்தி செவ்வாய்க்கிழமையன்று(தகுந்த ஜோதிடரை அணுகி உரிய நாளை அறிக) துவங்கி ஓராண்டு சங்கடஹர சதுர்த்தியை மாதந்தோறும் பின்பற்றிவர வேண்டும்.இதனை செவ்வாய்க் கிரக அதிபதி பின்பற்றினார்.
வன்னிமர விநாயகருக்கு அரிசி போடுவதன் மூலம் , நீங்கள் ஏழரை சனி, அஷ்டமச் சனி இலிருந்து தப்பிக்கலாம். இதைப் பற்றி நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

உச்சிஷ்ட கணபதி மந்திரம்
ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா

வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்.
கடன் தீர கணபதி மந்திரம்
ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா
ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல
பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா

கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.
மஹாஹஸ்தி விநாயகர்
பெரிய துதிக்கையை உடைய இவர் பெரும் தனத்தை (அதாவது கோடிக்கணக்கில் ரூபாய்களாக) அள்ளி வீசுபவராக இருக்கிறார்.
அப்படி நமக்க இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும்.நமது பாவங்களும் தீரும்.செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்துவிடும்.

ஓம் ஆதூன இந்த்ர க்ஷீமந்தம் சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய
மஹாஹஸ்தி தக்ஷ்ணேன


வாஞ்சா கல்பலதா கணபதி
நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.
பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம்  நிறைவேறும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்
ஐம் கஏஈ லஹ்ரீம்
தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு ஸஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத்
ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா


புரோகிதர், ஜோதிடர்
Manikanda Sharma G.V
Neela Matrimony
Neela Infomedia  ( WEBDESIGN )
Neela Computers
99 62 22 53 58
94 44 22 60 39