Tuesday 8 April 2014

ஸ்ரீ சூக்த மந்திரம் - தன ஆகர்ஷணம் த்யானம்


2. ஸ்ரீசூக்த மந்திரம் - தன ஆகர்ஷணம் த்யானம்

ராஜ ராஜேஸ்வரீம் லக்ஷ்மீம் வரதாம் மணிவாலிநீம் !
தேவீம் தேவப்ரியாம் கீர்த்திம் வந்தே காம்ய அர்த்த ஸித்தயே !!

குபேரோ ரிஷி : அனுஷ்ட்டுப் சந்த :
மணி மாலிநீ லக்ஷ்மீ தேவதா
ஸ்ரீம் - ப்லும் - க்லீம் பீஜம்
சக்தி : கீலகம்
ஆம் - ஹ்ரீம் - க்ரோம்
ஐம் - ஸ்ரீம் - ஹ்ரீம்
ஆம் - ஹ்ரீம் - க்ரோம்
என்ற பீஜங்களால் நியாஸம் செய்யவும்.


மந்த்ரம்

உபைது மாம் தேவஸக : கீர்த்திஸ்ச
மணிணாஸஹ  ப்ராதுர் பூதோஸ்மி
ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம் ரித்திம் ததாதுமே.

இந்த வேத ரிக்கை 32 லக்ஷம் தடவை ஸ்ரீபீஜத்துடன் ஜபிக்க குபேரன் ப்ரத்யக்ஷமாவான், வில்வம், தாமரை, முத்து, தாழம்பு முதலியவற்றால் யந்திரத்தை லக்ஷ்மீ ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். நாயுருவி சமித்தினால் ஹோமமும் அதே அளவு காயத்ரி ஜபமும் செய்ய வேண்டும். இது ஸ்ரீரத்நகோசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

மந்திரத்தின் பொருள்

சிவனின் நண்பனான குபேரனும், கீர்த்தி தேவதையும், சிந்தாமணி என்ற உயர்ந்த நவநிதியுடன் சேர்ந்து என்னை வந்து அடையட்டும்.

குறிப்பு

முத்தினால் அர்ச்சனை செய்வது விசேஷம். நல்ல வாசனையுள்ள மல்லிகை அல்லது ஜாதி புஷ்பத்தையும் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment