Sunday 18 November 2018

தெய்வ வழிபடு

தெய்வ வழிபாடுகள் தான் மனித வாழ்க்கைக்கு தெம்பூட்டுபவை. சோகமான நிலையில் இருக்கும் ஒருவரை யோகமான வழிக்கு மாற்றுவது தெய்வ வழிபாடுகள் தான். எந்த வழிபாடாக இருந்தாலும், குருவின் வழியாக அதை முறைப்படி செய்வது மிகுந்த பலனைத் தரும்.

ஒரு சிலருக்கு வழிபாடு மேற்கொண்ட உடனேயே பலன் கிடைத்து விடும். ஒரு சிலருக்கு அந்த பலன் தாமதமாகும். இதற்கு அவரவர் ஜாதக அமைப்பும், பூர்வ புண்ணிய பலனுமே காரணம். அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்காமல், தொடர்ந்து இறை வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நிச்சயம் நற்பலனைப் பெறலாம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனையோ தோஷங்கள் இருக்கின்றன. பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நாகதோஷம், கால சர்ப்பதோஷம், களத்திரதோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், நவக்கிரக தோஷம் என்று எண்ணற்ற தோஷங்கள் இருக்கின்றன. இந்த தோஷங்கள் எல்லாம் நீங்கி சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவதற்காகத் தான் பிரதோஷத்தன்று நாம் ஈசனையும், நந்தியெம்பெருமானையும் வழிபடுகிறோம்.

இல்லத்திலோ, ஆலயங்களுக்குச் சென்றோ கோ பூஜை என்று சொல்லக்கூடிய, பசுவிற்கான பூஜையைச் செய்தால் சகல சவுபாக்கியங்களும் உருவாகும். பசுவின் உடம்பில் அனைத்து விதமான தெய்வங்களும், தேவர்களும், முனிவர்களும், நவக்கிரகங்களும் குடியிருப்பதால், கோபூஜை செய்யும் பொழுது அனைவருடைய பரிபூரணமான அருளும் நமக்கும் கிடைப்பதோடு, அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியடைகின்றன.

பசுவின் வாலைத் தொட்டுக் கும்பிட்டாலே வந்த தடைகள் விலகும். கோவில்களில் அதிகாலை நேரம் நடைபெறும் கோபூஜையில் கலந்து கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் இல்லத்தில் குடிகொள்ளும். மேலும் கிரக தோஷங்கள், பாவங்கள், சாபங்கள் அகல எளிய வழிபாடு கோ பூஜை தான். நம்மால் இயன்ற பொழுதெல்லாம் பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் உணவு கொடுக்கலாம். இதனால் நம்முடைய கர்ம வினைகள், முன்னோர்களின் சாபங்கள் நீங்கி மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும்.

பசுவை தெய்வத்தின் அம்சமாக வழிபட வேண்டும். வாசமுள்ள மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். மஞ்சள், குங்குமம் வைத்து அதற்கு வஸ்திரம் சாத்தி, மூன்று முறை வலம் வந்து தீப தூபங்கள் காட்டி அதன் வால் பகுதியைத் தொட்டு வணங்க வேண்டும். பசு வசிக்கக் கூடிய கொட்டிலில் தியானம் செய்வதும், ஹோமம் செய்வதும் நல்லது. பசுவின் கோமியத்தை தீர்த்தமாக வீட்டிற்குத் தெளிப்பது வழக்கம். அதன் சாணம் கூட கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.

வீட்டில் கிரகப்பிரவேசம் வைக்கும் பொழுது, கோபூஜை செய்து பசுவும், கன்றும் வீட்டிற்குள் நுழைந்த பிறகே, வீட்டினர் குடியேறுவர். இவ்வாறு செய்வதால் சகல தோஷங்களும் விலகி, சகல சம்பத்தும் கிடைக்க அது வழிகாட்டும் என்பது நம்பிக்கை. மணிவிழா, நூற்றாண்டு விழா போன்றவை கொண்டாடும் போது கூட, முதன் முதலில் கோபூஜை செய்து, பிறகு கஜ பூஜை செய்தபிறகு தான் மற்ற ஹோமங்களைத் தொடங்குவார்கள்.

அமாவாசையன்று பருத்திக் கொட்டைப் பாலில் வெல்லம் கலந்து பசுவிற்கு கொடுப்பது மிகுந்த புண்ணியம். எந்தக் கிரகம் நமக்கு தீங்கு செய்கின்றதோ, அதற்குரிய கிழமையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து பசுவிற்கு கொடுத்தால் கிரகப் பாதிப்புகள் அகல வழிபிறக்கும்.

நீண்ட நாட்களாக புத்திர பாக்கியத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் வாழைப்பழத்தைக் கீறி, அதன்மேல் வெல்லம் வைத்து பசுவிற்கு கொடுத்து வந்தால் பிதுர் தோஷம், சாப - பாவ தோஷங்கள் போன்றவை விலகி, குலம் தழைக்கும். கொஞ்சி மகிழும் குழந்தை இல்லத்தில் தவழ வேண்டுமானால் தவறாமல் கோபூஜை வழிபாட்டை மேற்கொள்வதோடு, பசுவிற்கு இயன்ற அளவு உணவோ, பழமோ கொடுத்து வர வேண்டும்.

மேலும் பாதியில் கட்டிடப்பணிகள் நின்றாலோ, கட்டிடம் கட்டுவதில் தடைகள் வந்தாலோ அந்த இடத்தில் கோமியத்தைதெளித்து பசுவையும் அந்த இடத்தைச் சுற்றிவரச் செய்தால் இல்லம் கட்டுவதில் இருந்த தடை அகலும். இதை அனுபவத்தில் தான் உணர முடியும். வியாபார ஸ்தலங்கள், தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு முன் கண்டிப்பாக கோபூஜை செய்ய வேண்டும்.

அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி, கண்டகச் சனி போன்ற சனி ஆதிக்கங்கள் உள்ளவர்கள் சனிக்கிழமை பசுவிற்கு அகத்திக் கீரை கொடுப்பது நல்லது. பொதுவாக ஒவ்வொருவரும் இல்லத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கோமியம் தெளித்தால் கண்திருஷ்டி மற்றும் மனக்குழப்பங்கள் மாறி மகிழ்வான வாழ்க்கையும், மகாலட்சுமியின் கடாட்சமும் கிடைக்கும். பசுவுடன், கன்றையும் சேர்த்து வழிபட வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான நற்பலன் கிடைக்கும்.

இல்லத்துப் பூஜையறையில் பசுவும் கன்றும் இணைந்த கண்ணன் படத்தைவைத்து வழிபடுவதன் மூலம் பிள்ளைச் செல்வம் உருவாக வழிபிறக்கும்.

Thursday 15 November 2018

ஒருநாள், ஒரு காட்டிற்கு வேடன் ஒருவன் வந்தான்

_ஒருநாள், ஒரு காட்டிற்கு வேடன் ஒருவன் வந்தான்.._
_காட்டின் உட்பகுதிக்குச் சென்ற அவன், ஒரு மரத்தில் ஏராளமான பச்சைக் கிளிகள் இருந்ததைக் கண்டான்.. அவ்வளவு பச்சைக்கிளிகளை மரத்தில் பார்த்ததும் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.._

_பச்சைக்கிளிகளைப் பிடிக்கும் நோக்கத்துடன் மரத்தினடியில் வலை விரித்து, அதில் தானியங்களைத் தூவினான்.. பின்னர் அங்கிருந்து ஒரு மரத்தின் பின்னால் சென்று மறைந்து நின்றுகொண்டான்.. சிறிது நேரத்தில், அவன் எதிர்பார்த்த படியே பச்சைக்கிளிகள் பறந்து வந்து வலையில் சிக்கிக்கொண்டன.._

_வேடன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து, வலையில் சிக்கிய பறவைகளைப் பிடிக்கச் சென்றான்.._

அப்போது அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார்..

_வலையில் சிக்கியிருந்த கிளிகளைப் பார்த்ததும், முனிவரின் மனதில் கருணை உண்டாயிற்று.._ கிளிகளைப் பிடிக்கும் நிலையில் இருந்த வேடனைப் பார்த்து அவர், *வேடனே ! இந்தக் கிளிகளைக் கொல்லாதே..!* என்று கூறினார்.

முனிவரின் வேண்டுகோளுக்கு வேடன் உடன்படவில்லை..

அவன் முனிவரிடம், *சுவாமி ! எனக்கு இந்தக் கிளிகள்தான் இன்றைய உணவு.. எனவே, இவைகளைக் கொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.. கிளிகளுக்கு பதிலாக வேறு ஏதாவது மாற்று உணவு நீங்கள் எனக்குத் தருவதாக இருந்தால், இந்தக் கிளிகளை நான் கொல்லாமல் விட்டு விடுகிறேன்..* என்று கூறினான்.

முனிவர், *என்னிடம் சிறிது உணவு இருக்கிறது.. அதை நான் உனக்குத் தருகிறேன்.. இந்தக் கிளிகளை விட்டுவிடு..* என்று கேட்டுக் கொண்டார்..

அதற்கு வேடனும் சம்மதித்தான்..

_தான் கூறியபடியே முனிவர் தன்னிடமிருந்த உணவை வேடனுக்குக் கொடுத்தார்.. வேடன், முனிவர் தந்த உணவைப் பெற்றுக் கொண்டான்.. பிறகு அவன் வலையில் சிக்கியிருந்த கிளிகளை விடுவித்தான்.._

அப்போது முனிவர், கிளிகளைப் பார்த்து, *கிளிகளே ! இவன் வேடன்.. வேடன் வருவான்.. வலை விரிப்பான்.. அதில் தானியங்களைத் தூவுவான்.. நீங்கள் மரத்திலிருந்து கீழே பறந்து வந்து, வேடன் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்* என்று கூறினார்..
_இவ்விதம் கூறிய பின்பு முனிவர் தன்வழியே சென்றார்.._

ஒருவாரம் கடந்தது.. _வேடன் மீண்டும் கிளிகளைப் பிடிக்கும் நோக்கத்துடன் வலையுடன் அதே மரத்தின் அருகில் வந்தான்.. வேடனைக் கிளிகள் பார்த்தன.._

அவனைப் பார்த்ததும் எல்லாக் கிளிகளும் ஒன்று சேர்ந்து, *கிளிகளே ! இவன் வேடன்.. வேடன் வருவான்.. வலை விரிப்பான்.. அதில் தானியங்களைத் தூவுவான்.. நீங்கள் மரத்திலிருந்து கீழே பறந்து வந்து, வேடன் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்* என்று கூறின.. _கிளிகள் கூறியதைக் கேட்ட வேடன், இந்தக் கிளிகள் முன்பு நடந்ததை இன்னும் மறக்கவில்லை ! இங்கு நான் வலை விரித்தாலும், இந்தக் கிளிகள் என் வலையில் வந்து சிக்காது.._

_எனவே இங்கு வலை விரிப்பதால் பயனில்லை! என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.. ஆதலால் அங்கு வலை விரிக்காமல், வேறு இடம் தேடிச் சென்றான்.._
ஒரு மாதம் கடந்தது, _மீண்டும் கிளிகள் இருந்த அதே மரத்தின் அருகில் வேடன் வலையுடன் வந்தான்.._

🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸

இப்போதும் வேடனை கிளிகள் பார்த்தன.. உடனே அவை வேடனை நோக்கி,_
*கிளிகளே ! இவன் வேடன்.. வேடன் வருவான்.. வலை விரிப்பான்.. அதில் தானியங்களைத் தூவுவான்.. நீங்கள் மரத்திலிருந்து கீழே பறந்து வந்து, வேடன் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்* என்று ஒரே குரலில் கூறின..
_வேடன், முன்பு நடந்ததை இந்தக் கிளிகள் இன்னும் நினைவில் வைத்திருக்கின்றனவே ! இவைகள் என்வலையில் வந்து விழாது.. எனவே இங்கு நான் வந்து பயனில்லை என்று நினைத்து, வலை விரிப்பதற்கு வேறு இடம் தேடிச் சென்றான்.._ அதன்பிறகு சுமார் ஆறு மாதங்கள் கழிந்தன.
_வேடன் மீண்டும் கிளிகள் இருந்த அதே மரத்தினடியில் வலை விரிக்க வந்தான்.._ அவனைப் பார்த்ததோ இல்லையோ, உடனே எல்லாக் கிளிகளும் ஒன்று சேர்ந்து, *கிளிகளே ! இவன் வேடன்.. வேடன் வருவான்.. வலை விரிப்பான்.. அதில் தானியங்களைத் தூவுவான்.. நீங்கள் மரத்திலிருந்து கீழே பறந்து வந்து, வேடன் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்* என்று ஒரே குரலில் கூறின..

வேடன், _*இது என்ன ஆச்சரியம் ! இன்னும் இந்தக் கிளிகள் என்னை நினைவில் வைத்திருக்கின்றன ! இவை என் வலையில் விழாது !*_ என்று நினைத்தான்.. _என்றாலும் அவன், நான் இன்றைய தினம் எங்கெங்கோ அலைந்தும், எனக்கு வேட்டையாடுவதற்கு எந்த மிருகமோ பறவையோ கிடைக்கவில்லை.. இங்கு இந்தக் கிளிகளும் என்னை மறக்கவில்லை.. நானோ இப்போது காட்டில் சுற்றி அலைந்து மிகவும் களைத்துப் போயிருக்கிறேன்.. சரி ! இந்தக் கிளிகள் என் வலையில் சிக்காமல் போனாலும் பரவாயில்லை.. வேறு ஏதேனும் பறவைகள் இந்த வலையில் வந்து சிக்கலாம் என்று நினைத்து, வலையை விரித்து அதில் தானியங்களைத் தூவினான்.._

இப்படி வேடன் செய்ததை அங்கிருந்த கிளிகளெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தன. வேடன் தானியம் தூவி முடிந்ததும் கிளிகளெல்லாம் ஒன்றுசேர்ந்து, *கிளிகளே ! இவன் வேடன்.. வேடன் வருவான்.. வலை விரிப்பான்.. அதில் தானியங்களைத் தூவுவான்.. நீங்கள் மரத்திலிருந்து கீழே பறந்து வந்து, வேடன் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்* என்று கூறிய படியே அத்தனை கிளிகளும் பறந்து வந்து வேடனின் வலையில் சிக்கிக்கொண்டன !

*_அப்போது தான் வேடனுக்கு புரிந்து, இவை சொன்னதைச் சொல்லும் பச்சைக் கிளிகள்.. முனிவர் சொன்னதைச் அப்படியே இவை சொல்கின்றன.. ஆனால் அந்தச் சொற்களுக்கு என்ன அர்த்தம் என்று இந்தக் கிளிகள் புரிந்துகொள்ளவில்லை.. அதனால்தான் அனைத்து கிளிகளும் இப்போது என் வலையில் வந்து விழுந்திருக்கின்றன_* என்று..
_பிறகு அவன் வலையில் சிக்கிய கிளிகள் அனைத்தையும் பிடித்து சென்றான்._

👇
*இப்படித்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள்..*
_*நல்ல விஷயங்களை நிறைய கேட்கவும், படிக்கவும் செய்கிறார்கள்..*_
_*ஆனால், அவர்கள் அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றுவதில்லை..*_

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது.

_கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது.._

_அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது.._

_அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது.._

_அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது.._

_ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.._

_ஒரு நாள் பெரும் காற்று வீசியது.. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன.._

_கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது.._

_குருவிகள் மனம் பதறிக் கதறின.._
_கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக_ *_கீச், கீச்_* _என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.._

_பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது.._ _*எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும்.. இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன்*_ என்றது..

ஆண் குருவி சொன்னது.. _*அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது.. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது.. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது.. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும்.. முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்..*_ என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது..

*_கடலை எப்படி வற்றவைப்பது?_*

_*முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம்.. எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும்.. நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம்.. மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம்.. இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும்.. நமது முட்டைகள் வெளிப்படும்..*_

_இதையடுத்து இரண்டு குருவிகளும் தன்னம்பிக்கையுடன் ஊக்கத்துடன் செயலில் இறங்கின._

_விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன._
_பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன._

_மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின.. கொண்டுபோய் தொலைவில் கக்கின.._

_இப்படியே இரவு பகல் நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம்.._

*_அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக மகான் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.. மகா சக்திகள் நிறைந்த மகான் அவர்.._*

_ஆளில்லாத அந்தப் பகுதியில்_ _*கீச் கீச்*_ _என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார்.._
_இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.._

மீண்டும் _*கீச் கீச்*_ என்ற சப்தம்.. _குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன.. எதையோ அள்ளின.. மீண்டும் பறந்தன.. இப்படி பலமுறை நடைபெறவும், மகானுக்கு வியப்பு.._

_கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை?_ என்று நினைத்தார் அவர்..

_உடனே அந்த மகான் கண்களை மூடினார்.. உள்ளுக்குள் அமிழ்ந்தார்.. மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின.. அவர் மனம் உருகியது.._ _*முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன..*_

_உடனே தனது  பலத்தை ஒன்று திரட்டிய மகான் கையை உயர்த்தினார்.._

_*மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது.. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன..*_

_குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன._ ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன..

_*நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா?*_ என்றது ஆண் குருவி பெருமிதமாக..

மகான் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார்..
🐝

👇
_இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை.. மகானின் அருளால்.._
_ஆனால் அந்தக் குருவிகளுக்கு மகான் என்ற ஒருவரைப் பற்றியோ, அவரது வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது.. ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின.._

அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் மகான் தம் வழியே போயிருப்பார்..
அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின் உழைப்பும் முயற்சியும்தான்.. ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது, குருவிகளாலும் தான்.. மகானாலும் தான்.. மகானின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது..
👇
*எல்லையில்லா ஆற்றல் பெற்றவர்கள் நாம்..*
_விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைத்துக் கொண்டிருந்தால்.._
*_வாழ்வில் எல்லா நேரமும் நல்ல நேரம்தான்.._*

Sunday 11 November 2018

பகவான் கிருஷ்ணனின்

அவசியம் படியுங்கள்  அற்புதமான பதிவு இது.........

நீண்ட நாட்களாக பலர் மனதில் இருந்த கேள்விகளுக்கு  பதில்.......

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து,

தேரோட்டி
பல்வேறு சேவைகள் புரிந்து இறுதி வரை அவருடனே இருந்தவர்
உத்தவர்.

இவர் தனது வாழ்நாளில், தனக்கென எந்தவிதமான உதவியோ நன்மைகளோ
வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில்,

உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர்,

"உத்தவரே,

இந்த அவதாரத்தில் பலர்
என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.
ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.

ஏதாவது கேளுங்கள்,
தருகிறேன்.

உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,
எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களை உற்று கவனித்து வந்த உத்தவருக்கு,

சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த பல கண்ணனின் லீலைகள்,

புரியாத புதிராகவே இறுதிவரை இருந்தன.

அவற்றுக்கான தனக்கு புரியாத காரண காரியங்களைத்
தெரிந்து கொள்ள விரும்பினார்.

"பெருமானே ! நீ வாழச் சொன்ன வழி வேறு;

நீ வாழ்ந்து காட்டிய வழி
வேறு !

நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்ற பாத்திரத்தில்,

நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத பல விஷயங்கள்  உண்டு.

அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக
இருக்கிறேன்.

நிறைவேற்றுவாயா ?" என்றார் உத்தவர்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்:

"கண்ணா !

முதலில் எனக்கு ஒரு
விளக்கம் வேண்டும்.

கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன்.

உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, கடைசி வரை பரிபூரணமாக நம்பினார்கள்.

நடப்பவை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் முன் கூட்டியே நன்கறிந்த
ஞானியான நீ

'உற்ற நண்பன் யார்’

என்பதற்கு நீ அளித்த
விளக்கத்தின் படி, முன்னதாகவே சென்று,

தருமா!  வேண்டாம்
இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்
அப்படிச் செய்யவில்லை?

போகட்டும்.

விளையாட ஆரம்பித்ததும்,
தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு
நீதி பாடம் புகட்டியிருக்கலாம்.

அதையும் நீ செய்யவில்லை.

தருமன்
செல்வத்தை இழந்தான்,

நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான்.

சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.

தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது,

நீ சபைக்குள்
நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.'

திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். குல தேவதை அவளைப் பணயம் வைத்து ஆடு.

இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால்
விட்டான் - துரியோதனன்.

அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால்,
அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக
விழும்படி செய்திருக்கலாம்.

அதையும் நீ செய்யவில்லை.

மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை
ஏற்பட்ட போது தான் சென்று,

'துகில் தந்தேன்,

திரௌபதி மானம் காத்தேன்’ ஆடை தந்தேன், என்று ஜம்பமாக மார்தட்டிக் கொண்டாய்.

மாற்றான் ஒருவன்,
குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு,

எஞ்சிய
மானம் என்ன அவளிடம் இருக்கிறது? அவள் அப்போதே இறந்து விட்டாள் உயிர் மட்டுமே ஊசலாடியது,

எதனைக் காத்ததாக எண்ணி நீ பெருமைப்
படுகிறாய்?

ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்?

ஆபத்தான இது போன்ற
சமயத்தில் உன் பக்தர்களுக்கு உதவாத,

நீ எப்படி ஆபத்பாந்தவன் ?

நீ செய்தது நியாயமா!தருமமா ?'

என்று மிகக் கடுமையாக குரலில் குழம்பிய மன நிலையில் கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று,

மகாபாரதம் படித்த
நம் அனைவரின் உள்ளத்திலும் எழும் மனவலியோடு உணர்வு மிகுந்த  கேள்விகளே இவை.

நமக்காக
இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார்.

"உத்தவரே !

விவேகம் உள்ளவனே ஜெயிக்க
வேண்டும் என்பது உலக தர்ம நியதி.

துரியோதனனுக்கு இருந்த
விவேகம் தருமனுக்கு இல்லை.

அதனால்தான் தருமன் தோற்றான்"

என்றான் கண்ணன்.

உத்தவர் ஏதும் புரியாது அதிர்ச்சியுடன் திகைத்து நிற்க,

கண்ணன் தொடர்ந்தான்.

"துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது. ஆனால், பணயம் வைக்க
அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது.

'பணயம்
நான் வைக்கிறேன்.

என் மாமா சகுனி, பகடையை உருட்டிச்
சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.

அது விவேகம்.

தருமனும்
அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, நானும் பணயம்
வைக்கிறேன். ஆனால், என் சார்பாக

என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
பகடைக்காயை உருட்டுவான்'

என்று சொல்லியிருக்கலாமே

சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள் ?

நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா?

அல்லது அவன் கேட்கும் எண்ணிக்கைளை
என்னால்தான் போடமுடியாதா ?

போகட்டும்.

தருமன் என்னை
ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான். என்பதையாவது
மன்னித்து விடலாம்.

ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான்.

'ஐயோ ! விதி வசத்தால் சூதாட
ஒப்புக் கொண்டேனே !

ஆனால், இந்த விஷயம்  கண்ணனுக்கு
மட்டும் தெரியவே கூடாது. கடவுளே !

அவன் மட்டும் சூதாட்ட
மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’

என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு
அவனே என்னை வேண்டுதலால் கட்டிப் போட்டு விட்டான்.

நான் அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான்.

யாராவது தனது
பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று
மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு வெகு நேரமாக காத்து நின்றேன்.

பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,

தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர,

என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே !

அண்ணன் ஆணையை
நிறைவேற்ற  துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா ?

இல்லை.

அவளும் தனது  பலத்தையே நம்பி, சபையில் வந்து வீண் வாதங்கள்
செய்து கொண்டிருந்தாளே ஒழிய, 

என்னைக் கடைசி வரை கூப்பிடவேயில்லை !

நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல்,

'ஹரி...  ஹரி...  அபயம் கிருஷ்ணா! அபயம்’

எனக் குரல் கொடுத்தாள்.

பாஞ்சாலி.

அவளுடைய மானத்தைக் காப்பாற்ற
அப்போது தான் உள்ளே செல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

அழைத்ததும்
சென்றேன்.

அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன்.

இந்தச்
சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.

"அருமையான விளக்கம் கண்ணா !

அசந்து விட்டேன். ஆனால்,
ஏமாறவில்லை.

உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா ?"
என்றார் உத்தவர்.

"கேள்" என்றான் கண்ணன்.

"அப்படியானால், கூப்பிட்டால் தான் நீ வருவாயா ?

நீயாக, நீதியை
நிலை நாட்ட, ஆபத்துகளில், கஷ்டங்களில் உதவ உன் அடியவர்களுக்கு
வரமாட்டாயா ?"

புன்னகைத்தான்,

கண்ணன்.

"உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;
அதில் குறுக்கிடுவதும் இல்லை.

நான் வெறும் 'சாட்சி பூதம் மட்டுமே,

நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே !

அது தான் தெய்வ தர்மம்" என்றான்.

நன்றாயிருக்கிறது கிருஷ்ணா!

அப்படியானால்,

நீ அருகில் நின்று,
நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய்.

நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து
பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே
இருக்க  வேண்டும்.

அப்படித்தானே?"

என்றார் உத்தவர்.

உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நீங்கள் நன்றாக
உணர்ந்து பாருங்கள்.

நான் சாட்சி பூதமாக உங்கள் அருகில் நிற்பதை
நீங்கள் மனப்பூர்வமாக உண்மையில் உணரும் போது மட்டும் தான்
உங்களால் தவறுகளையோ,

தீவினை செயல்
களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.

அதை நீங்கள் மறந்து
விடும் போதுதான்,

எனக்குத் தெரியாமல் இது அது என ஏதாவது தீவினையை நான் உங்களுள் இருப்பதை மறைத்து எதையாவது
செய்து விடலாம் என்று எண்ணி நீங்களாகவே முடிவெடுத்து செய்கிறீர்கள்.

பாதிப்புக்கு உள்ளாக்கும்
சம்பவங்கள் பெரும்பாலும் தவறாக நிகழ்வதும் அப்போதுதான்.

எனக்குத் தெரியாமல்
சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே,

அதுதான் அவனது
அஞ்ஞானம்.

நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும்
இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால்,

இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக  முடிந்திருக்கும் அல்லவா?"
என்றான்,

ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார்.

ஆகா!  ஆகா!

எத்தனை உள்ளர்த்தம் வாய்ந்த அருமையான ஆழமான தத்துவம்!

பகவானைப் பூஜிப்பதும்,

பிரார்த்தனை செய்வதும்,

அவனை
உதவிக்கு அழைப்பதும்,

ஓர் உணர்வுதானே !

"அவனின்றி ஓர்
அணுவும் அசையாது"

என்ற நம்பிக்கை நமக்கு வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்?

அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும் ?

இந்த தத்துவத்தை தான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.

மொத்தத்தில் இறைவன் நமக்கு  உணர்த்துவது யாதெனில் என்னை "சரணாகதி" அடைபவனுக்கு எந்த துன்பமும்  இல்லை என்பதுதான்

(படித்ததில் பிடித்தது ) ராதே கிருஷ்ணா! ராதே ராதே! ராம் ராம்! 🙏 🙏